Connect with us

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

supreme court 1

தமிழகம்

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் கண்காணிப்பு குழுவுக்கு முழு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக மேல்முறையீடு மனுவை விசாரித்த வழக்கில் அணை பாதுகாப்பு விவகாரத்தல் தற்காலிகமாக கண்காணிப்பு குழுவுக்கு முழு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்த கண்காணிப்பு குழு பிறப்பிக்கும் உத்தரவுகள் அனைத்தும் இரு மாநில அரசுகளும் கட்டுப்பட வேண்டும் . குறிப்பாக இரு மாநில அரசுகளும் கண்காணிப்பு குழுவிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

கண்காணிப்பு குழு அணை பாதுகாப்பு ஆலோசனை விண்ணப்பங்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கலாம் என கூறியுள்ளது. மேலும், மத்திய அரசு தெரிவித்தது போல தேசிய அணை ஆணையத்திற்கு இந்த கண்காணிப்பு குழுவிற்கு முழு அதிகாரம் இருப்பதாக கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top