நிலநடுக்கம் ஏற்படும் இடத்தில் முல்லைப் பெரியாறு அணை!: மனுவில் கேரளா;

தமிழகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் இடையே பெரும் கருத்து வேறுபாடு அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இதுகுறித்து தற்போது கேரளம் புதிய கோரிக்கையை மனு தாக்கல் செய்துள்ளது.

முல்லை பெரியாறு அணை

அதன்படி முல்லை பெரியாறு அணையில் நீர் தேங்கும் உயரத்தை 136  அடியாக குறைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரள அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் நீர்மட்டத்தை குறைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை சேமிக்கலாம் என்று மத்திய மேற்பார்வை குழு அறிக்கையை ஏற்க முடியாது என்று மனுவில் கேரள அரசு கூறியுள்ளது. நிலநடுக்கம் ஏற்படும் இடத்தில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளதாக பிரமாண பத்திரத்தில் கேரள அரசு தகவல் அளித்துள்ளது.

superme court

அதிக நீரை சேமித்தால் அது முல்லைப் பெரியாறு  அணைக்கு பாதிப்பு ஏற்பட்டு, அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கு வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மனுவில் கேரள அரசு குறிப்பிட்டுள்ளது.

மழை காலங்களில் அணை நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரள அரசு கோரிக்கை வைத்துள்ளது. நவம்பர் 10 க்கு பின் மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை கேரள அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

பெரு மழை எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு அணையின் நீர்தேக்க புதிய விதிகளை வகுக்க கேரள அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment