முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கு கேரள மற்றும் தமிழக அரசின் ஒப்புதல் இருக்க வேண்டும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதன் படி, முல்லைப் பெரியாறு அணையின் அருகே புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசின் ஒப்புதலும் இருக்கவேண்டும் என கூறியுள்ளனர்.
இதனிடையே முல்லை பெரியாறு அணையில் அருகே புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2014-ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள்காட்டி மாநிலங்களவையில் ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.
குறிப்பாக நாடாளுமன்றத்தில் கேரளாவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டார்ஸ் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
மேலும், முல்லைப் பெரியாறு அணையில் புதிதாக அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்றால் இரண்டு மாநிலங்களும் ஒத்துழைத்தால் மட்டுமே அணை கட்டமுடியும் என திட்டவட்டமாக கூறியுள்ளது