எச்சரிகை; 42 அடியை எட்டியது முல்லை பெரியாறு அணை..!!

கடந்த வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து முல்லை பெரியாறு அணையின் முழு கொள்ளளவை எட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்ததனர். இருப்பினும், 142 அடியை மட்டுமே அணை எட்டி இருந்தது.

இதன் காரணமாக கடந்த டிசம்பர் 18-ம் தேதி இரண்டாம் கட்ட வெள்ள அப்பாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

புதிய கொரோனா பரவல்: நாடு முழுவதும் ஒத்திகை தொடக்கம்!!

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அணையின் நீர்மட்டமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனது.

அதன் படி, இன்றைய தினத்தில் முல்லை பெரியாறு அணையின் முழு கொள்ளளவான 142 அடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூடுபிடிக்கும் கொடநாடு வழக்கு.. எஸ்.பி. முரளி ரம்பாவிற்கு சம்மன்!!

அதே போல் உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி நீர்மட்டம் 5-வது முறையாக 142 அடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் கேரள பகுதிகளுக்கு மூன்றாம் கட்ட மற்றும் இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.