முல்லைப் பெரியாறு அணை: கேரள மக்களின் வாழ்வாதாரம், தமிழ்நாட்டின் நீர்த்தேவை! புதிய அணை வேண்டும்!!

தற்போது கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள பல மாவட்டங்கள் நீருக்குள் மூழ்கி உள்ளது. இதன் மத்தியில் கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு பற்றி வதந்திகள் பரப்பப்படுகின்றன தமிழக அரசு நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்தது.superme court

அதோடு மட்டுமில்லாமல் தமிழக அரசின் சார்பில் முல்லைப் பெரியாறு அணையில் 131 அடி வரை நீர் தேங்கி வைத்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் கேரளா உச்சநீதிமன்றத்தில் முல்லை ஆற்றில் 136 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்கக்கூடாது என்று வாதம் செய்துள்ளது.

அதன்படி முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என்று கேரள அரசு வாதிட்டது. தேவைப்பட்டால் வைகை அணையில் இருந்து நீர் தேக்கி கொள்ளலாம் என உச்சநீதிமன்றத்தில் கேரளா வாதம் செய்தது.

கேரள மக்களின் வாழ்வாதாரத்தையும், தமிழ்நாட்டின் நீர் தேவையும் கருத்தில் கொண்டு புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரளா கூறியுள்ளது. தமிழ்நாடு பயன்படுத்தும் நீரை குறைக்க வேண்டும் என்று கேரளா கோரவில்லை என்று வாதம் செய்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment