முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாடு கட்டுப்பாட்டில்தான் உள்ளதா? உறுதி செய்யுங்கள்!- பாரிவேந்தர்;

தற்போது பெய்து வரும் கனமழையால் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் காட்டாறு போல  பாய்கிறது. குறிப்பாக கேரளாவில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து காணப்படுகின்றன. கேரளா அரசு மற்றும் கேரளா மாநில அமைச்சர்கள் முல்லைப் பெரியாறு அணை குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.பாரிவேந்தர்

முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இது குறித்து தமிழ்நாடு மற்றும் கேரள அரசு மாறிமாறி தங்களது தரப்பு வாதத்தை முன்வைத்தனர். இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியை பற்றி பெரம்பலூர் மாவட்டம் பாரிவேந்தர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி முல்லை பெரியாறு அணைப் பகுதியை தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று எம்பி பாரிவேந்தர் கேட்டுக்கொண்டுள்ளார். மூன்று கேரள அமைச்சர்கள் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியை தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர் என்றும் பாரிவேந்தர் எம்பி சுட்டிக்காட்டி கூறியுள்ளார்.

தமிழக அமைச்சர்களும் அதனைப் போன்று ஆய்வு செய்து முல்லை பெரியாறு அணையை தமிழக கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பெரம்பலூர் மாவட்ட எம்.பி பாரிவேந்தர் அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment