முல்லைப் பெரியாறு அணை: பராமரிப்பு பணி செய்ய இடையூறு ஏற்படுத்தும் கேரள அரசுக்கு கண்டனம்..!!

தமிழகத்திற்கு அண்டை மாநிலங்களோடு நதிநீர் பிரச்சினை தான் பெரும் பிரச்சனையாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக அணை பிரச்சினை யாராலும் தீர்வு காண முடியாத ஒன்றாக இருக்கிறது.

அதன்படி கர்நாடக மாநிலத்தோடு நமக்கு மேகதாது அணை விவகாரம் உள்ளது. அதனை போல் கேரள அரசு தமிழகத்திற்கு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பிரச்சினையாக காணப்படுகிறது.

இந்த முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணியை செய்ய இடையூறு ஏற்படுத்தும் கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பன்னீர்செல்வம்.

தோழமை உணர்வுடன் பேசி முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார். என்னதான் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் முரண்பாடாக இருந்தாலும் நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர், நூல் வெளியீட்டு விழாவுக்கு கேரள முதலமைச்சர் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment