Entertainment
இன்னும் மூன்று பேர் தான்: உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை நோக்கி முகேஷ் அம்பானி!

உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பத்தாவது இடத்தில் முகேஷ் அம்பானி இருந்தார் என்பதை பார்த்தோம். இந்தியர் ஒருவர் உலக பணக்காரர்களில் பத்தாவது இடத்திற்கு வந்த தகவல் அறிந்ததும் கோடிக்கணக்கான இந்தியர்கள் கொண்டாடினர்
இந்த நிலையில் சமீபத்தில் அவர் வாரன் பஃபெட் அவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு எட்டாவது இடத்திற்குச் சென்றார் என்பதும் அதன் பின்னர் கூகுள் நிறுவனர் லாரி பேஜ் அவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு 6வது இடத்துக்கு முன்னேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் வந்து வெளிவந்த தகவலின்படி முகேஷ் அம்பானி தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முகேஷ் அம்பானிக்கு முன்னால் தற்போது இருப்பது மூன்றே மூன்று கோடீஸ்வரர்கள் மட்டுமே. அதாவது அமேசான் நிறுவனர் ஜெப் பெசொஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகிய மூவர் மட்டுமே முகேஷ் அம்பானிக்கும் முன் இருப்பதாகவும் மிக விரைவில் அவர்கள் மூவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
தற்போது முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 80.6 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது சொத்து மதிப்பு பங்குச்சந்தை மூலம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மிக விரைவில் அவர் முதலிடத்தை பிடித்தாலும் ஆச்சரியப்பட வைத்தது இல்லை என்பதுதான் உண்மை நிலவரம் என்பது குறிப்பிடத்தக்கது
