Connect with us

உலக பணக்காரர் பட்டியலில் 6வது இடத்தை பிடித்த முகேஷ் அம்பானி!

News

உலக பணக்காரர் பட்டியலில் 6வது இடத்தை பிடித்த முகேஷ் அம்பானி!

9ec1020774d1a3df4c8fcbf059b8e438

இந்த கொரோனா வைரஸ் காலத்தில் ஏழை எளியவர் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி பணக்காரர்கள் கூட தங்களுடைய சொத்துக்களின் மதிப்புகளை இழந்து வருகின்றனர் அதற்கு காரணம் வருமானம் இல்லாததே ஆகும்.

இந்த நிலையில் இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் சொத்துக்கள் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களுக்கு முன் உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த முகேஷ் அம்பானி சமீபத்தில் வாரன் பஃபெட் அவர்களை பின்னுக்கு தள்ளி எட்டாவது இடத்தைப் பிடித்தார். தற்போது மேலும் முன்னேறி ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

உலகின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் 6 மற்றும் 7வது இடத்தில் இருந்த கோடீஸ்வரர்களான எலன் மாஸ்க் மற்றும் கூகுள் நிறுவனர் லாரி பேஜ் ஆகிய இருவரையும் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து எட்டாவது இடத்தில் இருந்த அம்பானியின் சொத்து மதிப்பு 72.4 பில்லியன் சொத்து மதிப்புடன் உள்ள முகேஷ் அம்பானி தற்போது அவர் ஆறாவது இடத்தில் உள்ளார் விரைவில் அவர் ஐந்தாவது இடத்தையும் பிடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் உலகின் முதல் பணக்காரராக அமேசான் நிறுவனம் ஜெப் பெசோஸ் என்பவர் உள்ளார் என்பதும், இரண்டாவது இடத்தில் பில்கேட்ஸ், மூன்றாமிடத்தில் பெர்னார்ட் அர்னால்ட், நான்காம் இடத்தில் மார்க் ஜுக்கர்பெர்க், ஐந்தாம் இடத்தில் ஸ்டீவ் பால்மர் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top