
செய்திகள்
ரிலையன்ஸ் ஜியோவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய முகேஷ் அம்பானி!!
இந்தியாவிலேயே தற்போது முதல் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். ரிலையன்ஸ் நிறுவனம் பெட்ரோல், மொபைல் சேவை இவ்வாறு ஏராளமான அத்தியாவசிய தேவைகளின் பூர்த்தி செய்யும் நிறுவனமாக மாறி உள்ளது.
இதில் இயக்குனராக முகேஷ் அம்பானி திகழ்ந்து வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து முகேஷ் அம்பானி விலகியுள்ளார்.
முகேஷ் அம்பானியின் விலகலை அடுத்து நிறுவனத்தின் புதிய தலைவராக அவரது மகன் ஆகாஷ் அம்பானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால் பலரும் ஆகாஷ் அம்பானிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவு அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் மக்களிடையே பேமஸான ஆகாஷ் அம்பானி தற்போது புதிய இயக்குனராக பொறுப்பேற்றபின் மேலும் வளர்ச்சி பெறுவர் என்றும் தெரிகிறது.
