நான் சொல்றத மட்டும் கேளு.. பாடிட்டு இருந்த எஸ்பிபியை திட்டிய எம். எஸ். வி.. இதுக்கே கோபம் வந்துருச்சா..

தமிழ் சினிமாவில் இன்னும் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்க போகும் குரல் என்றால் நிச்சயம் எஸ்.பி. பியை சொல்லலாம். இளம் வயதில் எப்படி பாடல்களை பாடி இருந்தாரோ அதே குரலில் தன்னுடைய வயதான காலத்தில் கூட மிகச் சிறப்பாக பாடியிருந்த எஸ். பி. பி, கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மறைந்து போனார்.

மிக துரதிர்ஷ்டவசமாக அவரது மறைவு அமைந்த நிலையில், அவரது குரலில் புது பாடல்களை கேட்க முடியாது என ஒட்டுமொத்த இசை ரசிகர்களும் ஒரு நிமிடம் ஏங்கி போனதுடன் கண்ணீர் வடித்திருந்தனர். ஆனாலும் ஆயிரக்கணக்கான பாடல்களை தன்னுடைய குரல்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடி கொடுத்துள்ளதால் நிச்சயம் அவர் மறைந்தாலும் அவரது குரல் இந்த காற்றில் தான் எங்கும் பறந்து பயணித்துக் கொண்டே இருக்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கடந்த 1966 ஆம் ஆண்டு, தெலுங்கில் முதல் பாடலை பாடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியம், இதனை தொடர்ந்து தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார். அது மட்டும் இல்லாமல் ஒரே நாளில் 25 க்கும் மேற்பட்ட பாடல்களை ரெக்கார்ட் செய்து சாதனையும் படைத்துள்ள எஸ்பிபி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளையும் தனது பெயருக்கு பின்னால் வைத்துள்ளார்.

கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளுக்கு மேல் பல நடிகர்களுக்கு ஒத்துப் போகும் குரலாகவும் எஸ்பிபியின் குரல் அமைந்திருந்த நிலையில், எம். எஸ். விஸ்வநாதன் தொடங்கி இன்றைய காலக்கட்டத்தில் நம்பர் 1 இசையமைப்பாளராக விளங்கும் அனிருத் வரைக்கும் பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பாடி உள்ளார். சோகமான பாடலாக இருந்தாலும், மகிழ்ச்சியான பாடலாக இருந்தாலும் அதற்கேற்ப தனது குரலில் உணர்வை வெளிப்படுத்தி ரசிகர்களை கட்டிப் போடுவதில் வல்லவர் எஸ். பி. பி.

பாடகர் மட்டுமின்றி நிறைய திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்த எஸ். பி. பாலசுப்ரமணியத்திடம் எம். எஸ். விஸ்வநாதன் ஒரு முறை கோபப்பட்டது பற்றி தற்போது பார்க்கலாம். கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முத்தான முத்தல்லவோ. இந்த படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைக்க முத்துராமன், சுஜாதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இதில் வரும் எனக்கு ஒரு காதலி இருக்கின்றாள் என்ற பாடலை எஸ்பிபி பாடிய நிலையில் இதன் பாடல் பதிவின்போது நடந்து ஒரு சம்பவத்தை தற்போது பார்க்கலாம். இந்த படத்தின் கதைப்படி தேங்காய் ஸ்ரீனிவாசன் இசையமைப்பாளராக இருக்க, அவரிடம் வாய்ப்பு கேட்டு போகும் ஜெய்கணேஷ் என இருவரும் இனைந்து பாடும் பாடல் தான் ‘எனக்கு ஒரு காதலி இருக்கின்றாள்’.

எம்எஸ்வி எஸ்பிபியிடம் ஒரு முறையில் பாடச் சொல்ல அதைவிட சற்று அதிகமான குரலில் பாடிக் காட்டியுள்ளார். இதனைக் கேட்ட எம் எஸ் வி, மிக ஜாலியாக, ‘என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்து நீ அடக்கித் தான் வாசிக்க வேண்டும். நான் சொல்வதை மீறி செய்ய நினைத்தால் பல்லை உடைத்து விடுவேன். நான் பாடுவது போல் பாடினால் போதும்’ என செல்லமாக படத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப திட்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews