இவர் மட்டும் அன்று சொல்லாமல் இருந்தால்..; இவரால்தான் மகேந்திர சிங் தோனி.!! யார் இவர்?

நேற்றைய தினம் சரித்திர நாயகனான எம் எஸ் தோனியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு வந்தனர். இந்த நிலையில் எம் எஸ் தோனி என்பவர் அறிமுகம் ஆனதற்கு முதல் காரணமானவர் இவர்தான் என்று கூறுவது மிகையாகாது.

ஏனென்றால் இவரிடம் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திகா அல்லது எம்.எஸ். தோனியா என்ற கேள்வி கேட்டபோது அவர் கூறியது எம் எஸ் தோனி தான். அதற்குப் பின்பு எம் எஸ் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை வேறு விதமாக மாறி இந்தியாவிற்கு உலகக்கோப்பையும் கிடைத்தது.

ganguly

இத்தகைய பெருமையை உடையவர் முன்னாள் இந்தியன் கேப்டன் சௌரவ் கங்குலி தான். இவர் உலக கோப்பையை பெற்று கொடுக்க விட்டாலும் உலக கோப்பைக்கு தகுதியானவர்களை உருவாக்கிய பெருமை இவரையே சேரும்.

அதிலும் இவர் சற்று ஆக்ரோச குணமுடையவராக காணப்படுவார். ஏனென்றால் இவர் கிரீசில் இருக்கும்போது எதிரணிகள் பயப்படும் அளவிற்கு பவுண்டரிகள் இவரின் கைகளில் இருந்து பறக்கும்.

மேலும் இவர் சிறந்த ஆல்ரவுண்டர் என்பதால் இவரது கைகளில் இருந்து விக்கட்டுகளும் கிடைக்கும். இத்தகைய ஜாம்பவானுக்கு இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.