அவரு போட்ட சாப்பாட்டுல மயக்கமே வந்துருச்சு.. பலருக்கும் தெரியாத கேப்டன் விஜயகாந்தின் சிறந்த குணம்.. மெய்சிலிர்த்த எம்.எஸ்.பாஸ்கர்!

தமிழ் சினிமாவில் சிறந்த ஹீரோவாக திகழ்ந்த கேப்டன் விஜயகாந்த், நிஜ வாழ்க்கையிலும் நல்ல மனிதனாகவே வாழ்ந்து வருகிறார். சினிமாவில் பட்ட கஷ்டங்கள், முன்னணி நடிகர், முன் பின் தெரியாதவர்களுக்கு கூட உதவி செய்யும் மனம், உடல்நிலை சரியில்லாமல் முடங்கி போன கேப்டன் என அவரது திரை மற்றும் அரசியல் வாழ்க்கையே பல வலிகள் நிறைந்தது தான்.

அரசியலுக்குள் விஜயகாந்த் நுழைந்த சமயத்திலேயே அவரது நல்ல குணத்திற்காக தமிழகத்தின் முதலமைச்சராக மாறுவார் என்றும் கருதப்பட்டது. ஆனால், அரசியலில் கம்பீர நடை போட்ட விஜயகாந்தை மீம்ஸ்களால் அப்படியே முடக்கி போட்டனர். இதற்கிடையில் அவரது உடல்நிலையும் நாளுக்கு நாள் மோசமாக, பழைய கேப்டன் காணாமல் போய் விட்டார் என்றும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கண்ணீர் வடித்திருந்தனர்.

அதே போல, அதிகம் பேசவும் முடியாமல் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த், தனது பிறந்தநாளின் போது தான் தொண்டர்கள் முன்னிலையில் தோன்றுகிறார். அப்போதும் அவரால் சரிவர பேச முடியாமல் தான் போகிறது. அவரது நிலையை காணும் பலரும் மனம் உடைந்து போகின்றனர். அவர் முன்பு போல திரும்பி வர வேண்டும் என பலர் விரும்பினாலும் அது எந்த அளவுக்கு நடக்கும் என்பதும் சரிவர தெரியவில்லை.

முன்னணி நடிகராக விஜயகாந்த் உயர்ந்த பிறகு, அவர் சக நடிகர்களுக்கும், உதவிகள் கேட்டு தன்னை நாடி வருபவர்களுக்கும் எந்த பாரபட்சமும் பார்க்காமல் உதவி செய்யும் தங்க மனத்துடன் வலம் வந்தார். அவருக்கு இந்த நிலைமையா என பலரும் வேதனையில் ஆழ்ந்து போகும் சூழலில், கேப்டனின் குணம் பற்றி பல பிரபலஙகள் தெரிவித்திருந்த கருத்துக்களும் அதிக கவனம் பெற்று வருகிறது.

அந்த வகையில், பிரபல குணச்சித்திர நடிகர் எம்.எஸ். பாஸ்கர், விஜயகாந்துடன் அமர்ந்து சாப்பிட்டால் என்னவாகும் என்பது பற்றி ஆச்சரியத்துடன் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். விஜயகாந்துடன் கஜேந்திரா, தருமபுரி உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளவர் எம்.எஸ். பாஸ்கர்.

ஒருமுறை விஜயகாந்துடன் உணவருந்தும் சமயத்தில் நடந்தது பற்றி நேர்காணல் ஒன்றில் பேசிய எம்.எஸ். பாஸ்கர், “அவருடன் உணவருந்த வேண்டுமென்றால் நான்கு வயிறு வேண்டும். அவரின் அருகே அழைத்து உட்கார வைத்து அனைத்தையும் அதிகமாக அள்ளி வைக்க சொல்வார். அனைத்தையும் நாம் சாப்பிட்டு முடிக்கும் போது மயக்கமே வந்து விடும். கஷ்டப்பட்டு எழுந்து போய் கைகழுவி விட்டு வரும் போது பெரிய சைஸ் டம்ளர் ஒன்றில் பாயசம் தருவார்.

என்னண்ணே இது என கேட்டால் சாப்பிடு சாப்பிடு என மட்டும் சொல்லுவார். தொடர்ந்து அதை குடித்து முடிக்கும் போது நமக்கு தூக்கமே வந்து ஓய்வெடுக்க தான் தோன்றும். இதனால், சென்று ஓய்வெடுத்து விட்டு வா என்றும் வேடிக்கையாக விஜயகாந்த் கூறுவார்” என் எம்.எஸ். பாஸ்கர் தெரிவித்துள்ளார். இப்படி வயிறார அனைவருக்கும் சாப்பாடு போட்டு அழகு பார்க்கும் கேப்டன் விஜயகாந்திற்கு தான் இந்த நிலைமை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.