Entertainment
நடிகவேள் எம்.ஆர்.ராதா வாழ்க்கை வரலாறு படத்தின் ஹீரோ யார்?
எம்ஜிஆர், சிவாஜி ஆகிய பழம்பெரும் நடிகர்களுக்கே குருவாக இருந்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. இவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க பலர் முயன்ற நிலையில் தற்போது அவருடைய பேரனும், சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தை இயக்கியவருமான ஐக் இயக்கவுள்ளார்.
எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படம் குறித்து ஐக் தனது டுவிட்டரில் கூறியதாவது: எம்.ஆர்.ராதா அவர்களை பார்க்காதவர்கள் கூட அவரை மறந்திருக்க முடியாது. இது அவர்களுக்கானது தான். என்னுடைய தாத்தா ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா பற்றி இதுவரை சொல்லப்படாத கதையை படமாக எடுக்கிறேன். பேரனாக மட்டுமின்றி, ரசிகனாகவும் இந்தப் படத்தை உண்மையாக முழுமனதுடன் எடுப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தில் எம்.ஆர்.ராதா கேரக்டரில் நடிக்க பல நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் நடிகரை தேர்வு செய்து அதன்ப்பின்னர் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் ஐக் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் எம்.ஆர்.ராதாவின் வாரிசுகளான ராதாரவி, ராதிகா ஆகியோர்களும் முக்கிய கேரக்டர்களில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
