Entertainment
கவுதம் கார்த்திக்கின் அடுத்த பட ரிலீஸ் தேதி
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் காமெடி படத்தில் நடித்த நடிகர் கவுதம் கார்த்திக் அடுத்ததாக நடித்துள்ள ‘மிஸ்டர் சந்திரமெளலி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்தது. ஆனால் கோலிவுட் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கவுதம் கார்த்திக் முதன்முறையாக தனது தந்தை கார்த்திக்குடன் நடித்துள்ள இந்த படத்தில் ரெஜினா, வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சதீஷ், மகேந்திரன், அகத்தியன், மிமி கோபி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் திரு இயக்கியுள்ளார்.
