இந்த Youtuber செஞ்ச வேலைய பார்த்தீங்களா? ஈரக்குலையே நடுங்கிரும் போல..!

பிரபல சமூக வலைதளமான யூடியூப் வருவதற்கு முன்னர் பலர் தங்களது திறமைகளை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே முடங்கிப் போயினர். அதன்பின் டிக் டாக் என்ற சமூக வலைதள செயலி பலரையும் டிஜிட்டல் கிரியேட்டர்களாக மாற்றியது. தங்களுக்குள் இருக்கும் தனித்திறமைகளை வெளிக் கொண்டு வர டிக் டாக் செயலி முக்கிய பங்கு வகித்தது. அதன் பின் டிக் டாக் செயலிக்கு மத்திய அரசு இந்தியாவில் தடை போட்ட பின் யூடியூப் பெரிய அவதாரத்தை எடுத்தது. இதனால் டிக் டாக் பிரியர்கள் பலர் யூடியூப் பக்கம் தாவினர்.

தங்களது திறமைகளை வெளிக் கொணர்வது மட்டுமல்லாமல் கூடவே வருமானத்தையும் அளிக்கும் முக்கிய சமூக வலைதளமாக மாறியது Youtube. இதில் சேனல்கள் ஆரம்பித்து இன்று கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுபவர்கள் நிறைய .

அந்த வகையில் யூடியூப் மூலம் மாதம் 40 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஒரு இளைஞர் தற்போது வித்தியாசமான வீடியோ ஒன்றை பதிவிட்டு மில்லியன்களில் பார்வையாளர்களை பெற்று வருகிறார்.

மிஸ்டர் பீஸ்ட் எனப்படும் அந்த youtube சேனலை நடத்தி வருபவர் டோனல்சன் என்ற 25 வயது இளைஞர் ஆவார். தற்போது இவர் கண்டண்டுக்காக சவப்பெட்டிக்குள் படுத்து அதன் மேல் மண்ணை மூடி வைத்து கிட்டத்தட்ட ஏழு நாட்கள் உள்ளேயே இருந்துள்ளார்.

கேட்கவே அதிர்ச்சி அளிக்கும் இந்த வீடியோ எடுப்பதற்கு முன் தனது தனக்கு தேவையான உணவு, தண்ணீர் போன்றவற்றை சவப்பெட்டிக்குள்ளேயே வைத்துக் கொண்டார். மேலும் இதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சவப்பெட்டியில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.

தளபதி 68 படத்தில் இதனை சண்டை காட்சிகளா? வெளியான தெறிக்கவிடும் அப்டேட்!

இவரது நண்பர்கள் சவப்பெட்டிக்குள் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் இவரின் நடவடிக்கையை கண்காணித்து அதனை வீடியோவாக பதிவு செய்தனர்.

மூன்றே நாட்களில் இந்த வீடியோ கிட்டத்தட்ட 68 மில்லியன்கள் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

அண்மையில் லைக்குகள் மற்றும் வியூஸ் வாங்குவதற்காக பலரும் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருவது பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. எனவே youtube போன்ற சமூக வலைத்தளங்கள் இதுபோன்ற வீடியோக்களை வெளியிடக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் ஏனெனில் யூ டியூப் முகத்தில் பலர் தவறான செயல்கள் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதிலும் குறிப்பாக 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இவர்களைப் பார்த்து தாங்களும் அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் துணிகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...