மதுரை முன்னாள் எம்பி ராம்பாபு கொரோனாவால் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 60
மதுரையில் முன்னாள் காங்கிரஸ் எம்பியாக பதவி வகித்தவர் ராம்பாபு.
பலமுறை மதுரை பாராளுமன்ற தொகுதியில் நின்று வென்றுள்ளார்.
மதுரை மக்களுக்கு நன்கு பரிச்சயமான எம்.பி ராம்பாபு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் பரவிய கொரோனா தொற்றாலும் இவர் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ராம்பாபு இன்று காலை உயிரிழந்தார்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.