Connect with us

“எம்பி பதவி” என் ஆர் காங்கிரஸ்-பாஜக மோதல்!!

News

“எம்பி பதவி” என் ஆர் காங்கிரஸ்-பாஜக மோதல்!!

baa9fd120f3c44cb33ff7051a4f4f3ec

தற்போது தமிழகத்தில் திமுக கூட்டணியின் ஆட்சி நடைபெறுகிறது. மேலும் இதில் தமிழகத்தில் மத்தியில் ஆளும் பாஜகவின் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, அதேபோன்று நம் புதுச்சேரி மாநிலத்தில் பாஜக- என் ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அங்கு முதல்வராக என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரங்கசாமி உள்ளார்.4903efeb77e6834b9b38e12e9c6d7e44-3

இந்த நிலையில் தற்போது என்ஆர் காங்கிரஸ் பாஜக கட்சியினர் இடையே மோதல் நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும் அவை ஒரு எம்பி பதவிக்காக  நடைபெறுவது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி புதுச்சேரியில் மாநிலங்களவை எம்பி பதவிக்கு அக்டோபர் 4ஆம் தேதி மாநிலங்களை தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரி மாநிலங்களவை எம்பி கோகுலகிருஷ்ணன் பதவிக்காலம் அக்டோபர் 6 முடிவடைவதால் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக தற்போது என்ஆர் காங்கிரஸ்-பாஜக இடையே மோதல் நடைபெறுகிறது. மேலும் புதுச்சேரியில் மாநிலங்களவை எம்பி பதவியை பிடிக்க ஆளும் என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் மோதல்  நடைபெற்று வருகிறது. ஓரிடத்துக்கு நடைபெறும் தேர்தலில் போட்டியிட இருவரும் விருப்பம் தெரிவித்ததால் கட்சிக்குள்ளேயே குழப்பம் நடைபெறுகிறது. தேர்தல் குறித்து பாஜக மேலிடத் தலைவர்கள் பேச்சுவார்த்தை அழைப்பை ரங்கசாமி புறக்கணிப்பதாக கூறப்படுகிறது. முருகன் ஒன்றிய அமைச்சராக இருப்பதால் அவரை எம்பி ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

6 மாதத்தில் எம்பியாக வேண்டுமென்பதால் புதுச்சேரியில் முருகனை நிறுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் பாஜகவின் திட்டத்திற்கு என்ஆர் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ஆர் காங்கிரஸ் கட்சி சேர்ந்த ஒருவரை மாநிலங்களவை முதலமைச்சர் ரங்கசாமி நியமிக்க திட்டமிட்டுள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top