12-ம் வகுப்பில் 75% மதிப்பெண் எடுத்தால் கல்லூரி படிப்பு இலவசம்: முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

12-ம் வகுப்பில் 75 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தால் கல்லூரி படிப்பு முழுவதும் இலவசம் என்ற அதிரடி அறிவிப்பு அறிவிப்பை மத்திய பிரதேச மாநில முதல்வர் வெளியிட்டுள்ளார்.

அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவர்கள் பலர் வறுமை காரணமாக கல்லூரி படிப்பை படிக்க முடியாமல் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு போகிறார்கள் என்றும் அதனால் திறமையான மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை வீணாகும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வந்தனர்.

குறிப்பாக பொறியியல் மருத்துவம் சட்டம் போன்ற படிப்பை படிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நல்ல மதிப்பெண்கள் எடுத்த பல ஏழை மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேச மாநிலத்தில் படிக்கும் பள்ளி மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் 70 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் எடுத்தால் அவர்களுடைய கல்லூரி செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் குறிப்பாக பொறியியல் மருத்துவம் சட்டம் என எந்தத் துறையை மாணவர்கள் தேர்வு படிக்க விரும்பினாலும், அந்த துறையின் படிப்பு முடியும் வரை அரசு கட்டண செலவை ஏற்றுக் கொள்ளும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

ஏற்கனவே 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி வரும் நிலையில் தற்போது உயர் கல்வியும் இலவசமாக உள்ளதை அடுத்து மத்திய பிரதேச மாநில முதல்வருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.