வில்லி நடிகை வேணுமா.. நம்ம சத்யப்ரியாவ கூப்பிடுங்க.. 50 வருடங்களாக நடிப்பில் கலக்கும் நடிகை

தமிழ் திரை உலகில் வில்லி மற்றும் குணச்சித்திர நடிகையாக ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சத்யபிரியா. திரையுலகில் மட்டுமின்றி சின்னத்திரை உலகிலும் சேர்த்து கடந்த 50 ஆண்டுகளாக நடித்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

நடிகை சத்யப்ரியா ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்த சத்யப்ரியா, அதன் பிறகு குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லி வேடங்களில் நடித்துள்ளார். கொடுமைக்கார மாமியார் கேரக்டர் என்றால் உடனே சத்யப்ரியாவை கூப்பிடுங்கள் என்று இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கூறும் அளவுக்கு மாமியார் கேரக்டரில் வில்லத்தனமான நடிப்பில் கலக்கி உள்ளார்.

தமிழில் இவர் ’மஞ்சள் முகமே வருக’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்தார். சிவாஜி கணேசன் நடித்த தீபம், பைலட் பிரேம்நாத் போன்ற படங்களிலும் கமல், ரஜினி உள்பட பல பிரபலங்களின் படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் திரைப்படத்தில் இவர் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார்.

sathya priya2

அதன் பிறகு அஞ்சலி, மதுரை வீரன் எங்க சாமி, மௌனம் சம்மதம், பாட்டாளி மகன், ரிக்சா மாமா, அக்னி பார்வை, சின்ன கவுண்டர், ரோஜா உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் கிட்டத்தட்ட அவர்  தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டு கொம்பு வச்ச சிங்கம்டா என்ற திரைப்படத்தில் கூட அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் சத்யப்ரியா டப்பிங் கலைஞராகவும் இருந்துள்ளார். குறிப்பாக கமல்ஹாசனின் சத்யா உள்பட ஒரு சில படங்களில் அவர் டப்பிங் செய்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் அவர் ரேவதி சங்கரனுக்கு டப்பிங் கலைஞராக இருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்திருப்பார். குறிப்பாக இன்டர்வெல் காட்சியை சண்டையின் போது அவரது நடிப்பு சூப்பராக இருக்கும். தற்போது சத்யப்ரியா அவர்களுக்கு 70 வயது ஆனாலும் இன்னும் அவர் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதே போல அவரது வில்லத்தனமான மற்றும் அப்பாவியான நடிப்பு என அனைத்திற்கும் பெயர் போன சத்யப்ரியாவுக்கு ரசிகர்கள் பட்டாளமும் ஏராளம்.

sathya priya1

அதே போல் அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் ஏராளமாக கேரக்டரில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான புன்னகை, அன்பு மனம், சூர்யா, இதயம், முகூர்த்தம், வம்சம், ரன், மகாலட்சுமி போன்ற பல சீரியல்களில் எடுத்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அம்மா வேடத்தில் விசாலாட்சி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் இவர் ராஜ் டிவி, கலைஞர் டிவி, விஜய் டிவி, ஜெயா டிவி என பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.