60 நாட்களுக்கு பின்பு மீண்டும் தொடங்கியது மலை ரயில் போக்குவரத்து சேவை!

உதகை மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை நாள்தோறும் மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இயற்கை அழகினை கண்டு மகிழும் வகையில் ஏராளமானோர் இந்த மலை ரயில் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்துவர்.

இந்த நிலையில் கடந்த மாதம் முழுவதும் தொடர் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளங்களில் பாதிப்பை உண்டாக்கியது. அதோடு தண்டவாளங்களில் பாறைகள் விழுந்ததால் தண்டவாளங்கள் சேதமடைந்தன.

இதனால் மலைகளின் போக்குவரத்து சேவை தண்டவாளங்கள் சீரமைக்கும் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் மலை ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

அதன்படி இன்று காலை முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை மலை ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. 60 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் மலை ரயில் போக்குவரத்து சேவை தொடங்கியதால் ஏராளமான மக்கள் சந்தோஷத்தோடு பயணம் செய்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment