
தமிழகம்
பெட்ரோல் போடுவதில் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.!! காரணம் என்ன?
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பொது பிரச்சினையாக மாறியுள்ளது பெட்ரோல், டீசல் விலை தான். ஏனென்றால் சமீப காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வானது அதிகரித்தது.
மேலும் தமிழகத்தின் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் பல இடங்களில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இதனால் தமிழகத்திலும் தொடர்ந்து அடுத்தடுத்து விலை உயர்வு திகழ்ந்து கொண்டே வந்தது.
எனவே பல இடங்களில் இதனை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு திடீரென்று பெட்ரோல், டீசல் மீது விலை குறைப்பை அறிவித்தது.
அதன் விளைவாக பெட்ரோல் விலை 8 ரூபாய் வரை குறைந்தது, இந்த விலை குறைப்பானது கிட்டத்தட்ட 70 நாட்களாக அதே விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதன்படி சென்னையில் 69 நாட்களாக விலை மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 102.63 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசலும் விலைமாற்றம் இன்றி ரூபாய் 94.24க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி உள்ளனர்.
