மருமகளின் ‘தலை வெட்டி கொலை’ செய்த மாமியார்!! – ஆந்திராவில் பயங்கரம்!!

இந்தியாவைப் பொருத்தவரையில் மாமியார் மருமகள் பிரச்சினை என்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் மருமகளின் தலையை வெட்டி காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் ராமாபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பம்மா. இவருடைய மகனுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசுந்தரா என்ற பெண்ணுடன் திருமணம் நடத்திவைத்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் வழக்கம் போல் மாமியார், மருமகளிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன் வசுந்தராவின் உறவினர்கள் சிலர் சுப்பம்மாவை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சுப்பம்மா, வீட்டில் தனியாக வசுந்தரா இருக்கும் போது, சுப்பம்மா வசுந்தராவின் தலையை கத்தியால் தனியாக துண்டித்துள்ளார். அதோடு தலையை  ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு காவல்நிலையத்திற்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர், சுப்பம்மாவிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment