
தமிழகம்
மாமியாரை கட்டையால் அடித்து கொலை! மருமகளும் தற்கொலை!!
இப்போது மட்டுமல்ல ஆரம்பம் முதலே மாமியார் மருமகள் சண்டை ஆனது அனைத்து இடங்களிலும் சாதாரணமான ஒன்றாக காணப்படுகிறது. ஆனால் தற்போதைய சூழலில் இந்த சண்டையின்போது கொலை என்பதும் ஏற்படுகிறது.
அதிலும் நம் தமிழகத்தில் நாளுக்கு நாள் குடும்பப் பிரச்சனையின் காரணமாக கொலை மற்றும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மாமியாரை கொலை செய்து விட்டு மருமகள் தானும் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இந்த சம்பவம் எடப்பாடி அருகே நிகழ்ந்துள்ளது. அதன்படி சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குறும்பட்டி கிராமத்தில் மாமியாரை கட்டையால் அடித்துக் கொன்று விட்டு மருமகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாமியார் தைலம்மாளை கொலை செய்துவிட்டு மருமகள் செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கொங்கணாபுரம் போலீசார் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. மேலும் போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர்.
