கள்ளக்காதலுடன் தாய் உல்லாசம்; பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம் – சிக்கியது செல்போன் ஆதாரம்!

நிலக்கோட்டை அருகே பச்சிளங்குழந்தை மர்ம சாவில் திடீர் திருப்பமாக தாய் துர்காதேவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்காக பச்சிளம் குழந்தையை கிணற்றிற்கு அருகே இறக்கிவிட்டுச் சென்ற அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த துர்காதேவிக்கும், திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜதுரை என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். துர்காவில் தனது ஒன்றை வயது மகள் ரத்திகாவுடன் தனியாக வசித்து வருகிறார். இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி, தாய் மாமன் பாலுவின் தோட்டத்திற்குச் மகள் ரத்திகாவுடன் துர்கா தேவி சென்றதாக தெரிகிறது. அங்கு இரவு நேரத்தில் கிணற்றிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனது.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர், தாய் துர்காதேவி ஆகியோர் குழந்தையை இரவு முழுவதும் தேடிய நிலையில், மறுநாள் காலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்த வந்த நிலக்கோட்டை காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு விசாரணையில் ஈடுபட்டனர். குழந்தை தானாக தவறி விழுந்து உயிரிழந்ததா? அல்லது வேறு ஏதும் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்ததால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

எனவே துர்கா தேவியின் செல்போனை ஆய்வு செய்த போலீசாருக்கு, அவருக்கு நிலக்கோட்டை அடுத்த தோப்புபட்டியைச் சேர்ந்த அஜய் என்கிற 21 வயது இளைஞருக்கும் இடையே முறையற்ற உறவு இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக குழந்தை காணாமல் போன இரவு அன்று இருவரது செல்போன் சிக்கனலும் கிணற்றிற்கு அருகே இருந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருவரையும் விசாரித்ததில் அஜய்க்கு, துர்கா தேவிக்கு கள்ளதொடர்பு இருந்து வந்ததது வெளியானது. சம்பவத்தன்று இரவு அஜையும் துர்கா தேவியும் உள்ளாசமாக இருக்க காட்டுப்பகுதிக்கு சென்றபோது,குழந்தை ரித்திக்காவை அஜாக்கிரதையாக கிணற்றின் அருகே இறக்கிவிட்டு சென்றதால் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிர் இழந்தது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து தாய் துர்காதேவி மற்றும் கள்ள காதலன் அஜய் இருவரையும் கைது செய்த நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் பேபி மற்றும் சார்பு ஆய்வாளர்கள் பாலமுத்தையா,ரவி ஆகியோர் இருவரையும் கைது செய்து நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்,இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.