கன்றுக்குட்டிக்காக காரின் பின்னால் 2 கி.மீ ஓடிய தாய்ப் பசு.. நெகிழ்ந்துபோன மக்கள்

உலகிலேயே எந்த ஒர் விஷயத்திற்கும் ஈடானதாகக் கருதப்படாத அன்பு தாயின் அன்பு. மனிதர்கள் மட்டுமல்லாது ஐந்தறிவு உள்ள ஜீவன்களும் தாய் பாசத்தில் நம்மை எப்போதும் நெகிழ வைக்கத் தவறுவதே கிடையாது.

அந்தவகையில் தாய்ப் பசு ஒன்று தனது கன்றுக் குட்டிக்காக காரின் பின்னால் இரண்டு கிலோ மீட்டருக்கும் மேல் ஓடிச் சென்றுள்ள வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் விவசாயி பசு மாடு ஒன்றினை வளர்த்து வந்துள்ளார், அந்த பசு மாடு இரண்டு தினங்களுக்கு முன் கன்றுக் குட்டியை ஈன்றது.

கன்றுக் குட்டி பிறந்தபின் போதுமான இடவசதி இல்லாத நிலையில் வேறு ஒரு இடத்தில் தொழுவத்தினை அமைத்து அங்கிருந்து பசு மற்றும் கன்றை அழைத்துச் செல்ல நினைத்துள்ளார்.

அப்போது கன்றுக்குட்டியால் நடக்க முடியாததால் கார் ஒன்றினை ஏற்பாடு செய்து தொழுவத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது கன்றுக்குட்டி காரில் செல்வதைக் கண்ட பசு எங்கேயோ கூட்டிச் செல்கிறார்களே என்று பயந்து பாசத்துடன் 2 கி.மீ மேல் காரின் பின்னால் ஓடி வந்துள்ளது.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment