
செய்திகள்
தாயாரின் 100வது பிறந்தநாள்.. பிரதமர் மோடி குஜராத் பயணம்!!
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் சுமார் 21 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுமார் 21 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை குஜராத்தில் இன்று அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் தாயார் தமது 100-வது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் ராய்சான் பகுதியில் உள்ள 80 மீட்டர் சாலைக்கு மோடியின் தாயார் ஹீரபென் மோடி பெயர் வைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக காந்தி நகர் மேயர் கூறியுள்ளார்.
மேலும், குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மேளதாளத்துடன் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
