சென்னையில் இன்று காலை வரை மட்டும் 48 டன் பட்டாசு கழிவுகள் நீக்கம்!!

நேற்றைய தினம் இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை என்றால் அனைவருக்கும் முதலில் நினைவு வருவது பட்டாசு வெடிப்பது தான். இந்த நிலையில் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு அம்மாநில அரசுகள் அனுமதி அளித்திருந்தனர்.சென்னை மாநகராட்சி

பட்டாசு வெடிக்க அனுமதி அளித்திருந்தாலும் அடுத்த தினம் பட்டாசு கழிவுகளை அகற்ற நகராட்சி மற்றும் மாநகராட்சி தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுவர்.நேற்றைய தினம் பட்டாசு வெடித்த நிலையில் தற்போது பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.

தற்போது தலைநகரமான சென்னையில் பட்டாசு கழிவுகள் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சென்னையில் மட்டும் 48 டன் பட்டாசு கழிவுகளை அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்று காலை வரை 48 டன்  பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சென்னையில் நாளை வரை பட்டாசு கழிவுகளை அகற்றப்பட உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்  தகவல் அளித்துள்ளனர்.

சென்னையில் கடந்த ஆண்டு தீபாவளியின்போது 87 டன்  பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டிருந்தன என்றும் கூறுகின்றனர். இதனால் இந்த வருடம் சென்னையில்  பட்டாசு கழிவுகள் சற்று குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment