அதிகாலையில் பயங்கர தீ விபத்து: தனியார் வங்கியின் ஏ.சி, கணினிகள் எரிந்து சேதம்!

சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் இருக்கக்கூடிய அடுக்குமாடி கட்டிடத்தில் பேங்க் ஆப் இந்தியா கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிகாலை 5.30 மணியளவில் வங்கில் இருந்து ஆபாயமணி ஒலி எழுந்துள்ளது.

இதனை பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உள்ளனர். பின்பு காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

அலர்ட்! அடுத்த 3 மணி இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை தகவல்..!!

இந்நிலையில் மயிலாப்பூர், அசோக் நகர், திருவல்லிகேணி ஆகிய பகுதியிகளில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் வங்கியின் கதவை உடைத்து உள்ளே சென்று சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அதே போல் மின்வாரியத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அந்த பகுதிக்கு மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: பாஜகவில் இருந்து காயத்ரி விலகல்!!

இந்த விபத்தில் ஏ.சி, கணினிகள், மரப்பொருட்கள் போன்றவைகள் முற்றிலும் தீயில் கருகி சேதமாகி உள்ளது. மேலும், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.