தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த சில தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலின்படி வெளியான அறிக்கையில் தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 9 லட்சத்து 17 ஆயிரத்து 667 உள்ளது. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரத்து 522 காணப்படுகிறது. இதில் மூன்றாம் பாலினத்தவரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 342 ஆகும்.
இதனால் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 51 ஆயிரத்து 855 அதிகமாக காணப்படுகிறது.
தமிழ்நாட்டிலேயே சோளிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தான் அதிக வாக்காளர்கள் உள்ளனர். சோளிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 7 லட்சத்து நாற்பத்தி எட்டு வாக்காளர்கள் உள்ளனர். சோழிங்கநல்லூர் பகுதியில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 50 ஆயிரத்து 614 பெண் வாக்காளர்கள், 3 லட்சத்து 49 ஆயிரத்து 325 காணப்படுகின்றனர். மூன்றாம் பாலினத்தவர் 109 பேர் உள்ளனர்.
தமிழ்நாட்டில் சென்னை துறைமுகம் தொகுதியில் தான் வாக்காளர் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டுள்ளது. அதன்படி துறைமுகம் தொகுதி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 176679 காணப்படுகிறது.ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 91998 ஆக உள்ளது. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 84624 ஆக உள்ளது. மூன்றாம் பாலினத்தவரின் எண்ணிக்கை 57 ஆகவும் காணப்படுகிறது.
www.nvsp.in என்ற இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. 2022 ஜனவரி 1-ஆம் தேதி முதல் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.