மாண்டஸ் புயல் எதிரொலி: சென்னை மெட்ரோவுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்!

மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நேற்று மாண்டஸ் புயல் கரையை கடந்தது என்பதும், இந்த புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது என்பதும் ஏராளமான கடற்கரை ஓரங்களில் உள்ள கடைகள் சேதம் அடைந்தன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சென்னை மெட்ரோ நிலையங்களில் இதுவரை கணக்கெடுத்த வகையில் ரூ.3.45 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கோயம்பேடு, ஈக்காட்டுதாங்கல், ,கிண்டி, சின்னமலை, உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளதாகவும் அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அண்ணா நகர், அரும்பாக்கம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் வழிகாட்டும் பலகைகள் மற்றும் இதர பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக 3.45 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.