சீனாவில் 18 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணி!! 132 பேரும் உயிரிழப்பு!!

சீனாவில் பெரும் விமான விபத்து ஒன்று நடந்தது. அதன்படி சீனாவில் சுமார் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென்று 3000 அடி கீழே இறங்கியதால் கீழே விழுந்து நொறுங்கியது.

இதில் பயணித்த 132 பேர்களின் கதி என்ன என்று தெரியாமல் மீட்பு பணியினர் தீவிரமாக பணியில் ஈடுபட்டுள்ளனர். சீனாவில் 18 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணி நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் 132 பயணிகளுடன் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடத்தில் 18 மணி நேரத்துக்கு மேலாக மீட்பு பணிகள் நடக்கிறது. மீட்புப் பணிகள் நடைபெறும் நிலையில் விபத்து நடந்த இடத்திலிருந்து இன்னும் ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஈஸ்டர்ன்  ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் மார்ச் 21ஆம் தேதி வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. விபத்து நிகழ்ந்த இடத்தில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி என அறிவித்துள்ளன.

விபத்துக்குள்ளான விமானத்தில் 123 பயணிகள் 9 விமான ஊழியர்கள் என மொத்தம் நூற்றி முப்பத்தி இரண்டு பேரும் உயிரிழந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment