Connect with us

புதிய வாக்காளர்களுக்கு பல சலுகைகள்!! தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு;

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்

தமிழகம்

புதிய வாக்காளர்களுக்கு பல சலுகைகள்!! தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு;

இந்தியாவில் அனைத்து விதமான அடையாள அட்டைகளிலும் ஆதார் எண் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகிறது. அதன்படி வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அனைத்து கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அதிமுக பிரச்சனை பற்றியும் அவர் கூறினார்.

அதன்படி அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினை பற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்று கூறினார். ஓபிஎஸ்-இபிஎஸ் பிரச்சனை குறித்து ஆணையமே முடிவு செய்யும் என தலைமை தேர்தல் அதிகாரி தகவல் அளித்தார்.

மேலும் ஆதார் இல்லாவிட்டால் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 ஆவணத்தை வாக்காளர் அடையாள பட்டியலுடன் இணைக்கலாம் என்றும் கூறினார்.

ஆதார் வாக்காளர் பட்டியல் இணைப்பு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தகவல் அளித்தார். பாஸ்போர்ட், வங்கி கணக்கு, பான் கார்டு உள்ளிட்ட 11 ஆவணங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

ஆதார் எண் இடம்பெறும் வகையில் 2023 மார்ச் 31 ஆம் தேதி வரை புதிய வாக்காளர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top