Connect with us

தேவை அதிகரிப்பு….பயணிகளை விட நிலக்கரி ஏற்றி செல்லும் ரயிலுக்கே முக்கியத்துவம்…!!

trai

News

தேவை அதிகரிப்பு….பயணிகளை விட நிலக்கரி ஏற்றி செல்லும் ரயிலுக்கே முக்கியத்துவம்…!!

கடந்த சில நாட்களாக நம் இந்திய அளவில் பேசப்பட்டு வரும் வார்த்தை என்றால் நிலக்கரி பற்றாக்குறை தான்.  நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

அதோடு மட்டுமில்லாமல் ரயில் சேவையும் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகிறது. இந்த நிலையில் நிலக்கரி ஏற்றி செல்லும்  ரயிலுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ரயில்வே வாரியத் தலைவர் கூறியுள்ளார்.

பயணிகள் ரயில்களை விட நிலக்கரியை ஏற்றி செல்லும் ரயில்களுக்கு உயர் முன்னுரிமை அளித்து இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நிலக்கரியின் தேவையும் நுகர்வும் 20 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிலக்கரி தேவை அதிகரிப்பால் ரயில்களில் அதிக அளவில் நிலக்கரி ஏற்றிச் செல்லப்படுகிறது என்றும் ரயில்வே வாரியத் தலைவர் கூறியுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் அளவு அதிக நிலக்கரி ஏற்றி செல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top