Connect with us

ஹீரோக்களை விட அதிக அளவு ‘followers’ கொண்டுள்ள ஹீரோயின்கள்? இன்ஸ்டாகிராமில் அவர்கள் ராஜ்ஜியம்தான்;

heriones

செய்திகள்

ஹீரோக்களை விட அதிக அளவு ‘followers’ கொண்டுள்ள ஹீரோயின்கள்? இன்ஸ்டாகிராமில் அவர்கள் ராஜ்ஜியம்தான்;

ஹீரோக்களை விட அதிக அளவு ‘followers’ கொண்டுள்ள ஹீரோயின்கள்? இன்ஸ்டாகிராமில் அவர்கள் ராஜ்ஜியம்தான்;

பொதுவாக ஹீரோக்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் இன்ஸ்டாகிராமில் அப்படி கிடையாது என்பது போல புள்ளி விவரங்கள் கூறுகிறது. இன்ஸ்டாகிராமில் நடிகர்களைவிட நடிகைகளுக்கு அதிக அளவு follwers உள்ளதாக தெரிகிறது.

அந்த வரிசையில் முதலிடத்தில் காணப்படுகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக தென்னிந்திய ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டார். அதன் பின்னர் அவர் அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து மேலும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இவர் இன்று வரையில் இன்ஸ்டாகிராம் 455 போஸ்ட்களை ஷேர் செய்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் இவரை 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பின்பற்றுவதாக தெரிகிறது. தற்போது இவர் தளபதி அறுபத்தி ஆறு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக ரகுல் பிரீத் சிங் காணப்படுகிறார். கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரை தற்போது வரையில் இரண்டு கோடிக்கும் அதிகமானவர்கள் பின்பற்றுகிறார்கள்.

இதில் பலரும் பலவிதமாக நடிகை சமந்தா காணப்படுகிறார். இவரை 2.3 கோடிக்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர்.

நாலாவது இடத்தில் நடிகை காஜல் அகர்வால் காணப்படுகிறார்.இவரை 2.2 கோடிக்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர். தற்போது தான் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது இடத்தில் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் காணப்படுகிறார். இவரை 1.9 கோடிக்கும் அதிகமானவர்கள் பின்பற்றுகின்றனர்.

ஆறாவது இடத்தில் நடிகை பூஜா ஹெக்டே காணப்படுகிறார். இவரை 1.3 கோடிக்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர். ஏழாவது இடத்தில் தமன்னா உள்ளார் இவரை 1.6 கோடிக்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top