முதல்வர் பதவியா..? சினிமாவா? புரட்சித் தலைவருக்கே தடை போட்ட முக்கியப் புள்ளி

சினிமா, அரசியல் என இரு குதிரைகளிலும் வெற்றிகரமாக சவாரி செய்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அரசியலில் நுழைந்து முதல்வர் ஆன பின் சினிமாவிற்கு நிரந்தரமாக முழுக்குப் போட்டார். இருந்த போதிலும் அவரது நடிப்பு ஆசையும், கலைத்தாகமும் அவரை விடவில்லை.

இந்நிலையில் ஒரு பொது மேடையில் முதல்வராக இருந்து கொண்டே நடிப்பேன் என்று எம்.ஜி.ஆர் கூற அச்செய்தியால் உடனே பரபரப்பானது தமிழகம். இதனால் நள்ளிரவு வந்த ஒரு போனால் அன்றோடு நடிப்புக்கு முழுக்குப் போட்டார் எம்.ஜி.ஆர்., யார் அந்த முக்கியப்புள்ளி, போனில் சொன்னது என்ன என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது ஒருமுறை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சார்பில் சினிமா எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிக்கை வெளியானது. இந்த பத்திரிக்கையின் வெளியீட்டு விழாவில், எம்.ஜி.ஆர், இயக்குனர் முக்தா சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முக்தா சீனிவாசன், சினிமாவில் பல கருத்துக்களை நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் முதல்வர் ஆகிட்டீங்க, இனிமேல் அப்படி யார் சொல்வார் என கேட்டுள்ளார். இதன்பிறகு விழாவின் இறுதியில் பேசிய எம்.ஜி.ஆர், இனி தொடர்ந்து பாதி நாள் ஆட்சியிலும், பாதி நாள், சினிமாவிலும் இருப்பேன் என்று கூறியுள்ளார். இந்த செய்தி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

அக்காவுக்கு வந்த வாய்ப்பு.. அலேக்காக அள்ளிய ஊர்வசி.. முந்தானை முடிச்சு ஹீரோயின் ஆனது இப்படித்தான்

ஆனால் எம்.ஜி.ஆர் பேசிய இந்த கருத்து, அப்போது பிரதமராக இருந்த மொராஜிதேசய்க்கு தெரிய வந்த நிலையில், அன்று இரவே எம்.ஜி.ஆரை தொலைபேசியில் அழைத்த அவர், முதல்வராக இருந்துகொண்டு நீங்கள் நடிக்க கூடாது. அப்படி நடிக்க வேண்டும் என்றால் முதல்வராக வேறு ஒருவரை நியமித்து விட்டு நடியுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் உடனடியாக இந்த செய்தியை நிறுத்தும்படி எல்லா பத்திரிக்கைகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி அனைத்து பத்திரிக்கைகளும் செய்தியை நிறுத்தி விட்ட நிலையில், தினத்தந்தி மட்டும் செய்தியை வெளியிட்டு விட்டதால், மறுநாள் மறுப்பு செய்தியை வெளியிட்டிருந்தனர். ஆனாலும் முதல்நாள் இந்த செய்தி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதோடு எம்.ஜி.ஆரின் நடிப்பு சகாப்தமும் முடிவுக்கு வந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.