குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000.. இன்று முதல் அமல்!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தனது தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகி இருக்கும் நிலையில் இன்னும் இந்த திட்டம் அமல்படுத்தப்படவில்லை என்ற அதிருப்தி குடும்ப தலைவிகள் மத்தியில் உள்ளது. இருப்பினும் வரும் பட்ஜெட்டில் இது குறித்து அறிவிப்பு வழியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

tamilisai   இந்த நிலையில் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையில் இந்த திட்டம் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

tamilisai1புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் நிதி உதவித் திட்டத்தை அம் மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். மேலும் புதுச்சேரி அரசு அறிவிக்காததை செயல்படுத்துகிறது என்றும் சில அரசுகள் அறிவித்தும் செயல்படுத்த வில்லை என்றும் அவர் சூசகமாக திமுக அரசை சுட்டிக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamilisai3ஏற்கனவே ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கவர்னர் பணி மட்டுமின்றி அரசியலும் செய்து வருகிறார் என்று குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

tamilisai2புதுச்சேரியில் இனிமேல் ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு அம்மாநில குடும்ப தலைவிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில குடும்பச் செலவுகளுக்கு இனிமேல் கணவர் மற்றும் குழந்தைகளை எதிர்பார்க்காமல் குடும்ப தலைவிகளே அந்த ஆயிரம் ரூபாயிலிருந்து செலவு செய்து கொள்ளலாம் என்பது குடும்பத் தலைவிகளுக்கு அளிக்கப்படும் ஒரு சுதந்திரமாகவே கருதப்படுகிறது.

இந்த திட்டத்தை முதன் முதலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தான் அறிவித்தது. ஆனால் அதை காப்பி அடித்து திமுக அறிவித்ததாக கூறப்பட்ட நிலையில் அந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் விரைவில் திமுக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.