மாண்டஸ் புயல்: தலைமை செயலாளர் ஆலோசனை!

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தற்போது கரையை நெருங்க கூடிய நிலையில் உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் தமிழக அரசு எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக நேற்றையதினம் தலைமைச் செயலாளர் இறையன்பு முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தற்போது இன்றைய தினத்திலும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக தென் மண்டல ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் பங்கேற்க உள்ளார். அதே போல் உயர் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதற்கும் மேற்பட்ட முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் கூட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சென்னையில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.