Connect with us

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை-முதலமைச்சரின் உத்தரவு என்னென்ன?

rescue team scaled

தமிழகம்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை-முதலமைச்சரின் உத்தரவு என்னென்ன?

இந்த முறை தன் தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை சற்று அதிகமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தாக்கம் நம் தமிழகத்தில் அதிதீவிரமாக நிலவியது.

அதிலும் குறிப்பாக மே மாதம் முதலிலேயே தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான மழை பெய்தன. இதனால் எந்த ஒரு ஆண்டிலும் இல்லாத வகையில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு அதிகளவு பதிவாகியுள்ளது.

இதனால் வடகிழக்கு பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்னர்  பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மழைநீர் வடிகால், சாலை புனல் அமைப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின், நெல் கொள்முதல் நிலையங்கள், பனை விதை நடக்கூடிய பணிகள் குறித்து செயலாளர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top