Connect with us

“பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை”; முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை!!

News

“பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை”; முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை!!

abe556073a05e0dd13703b9069a0482a

தற்போது நம் தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவக்காற்று காலம் தொடங்கிவிட்டது என்றே கூறலாம். ஆனால் தமிழகத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று காலத்தைவிட வடகிழக்கு பருவக்காற்று காலத்தில்தான் அதிக மழை கிடைக்கும். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கி சில நாட்களே உள்ள நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இது குறித்து ஆலோசனை செய்து இருக்கிறார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.0ab568acce8979cbc0d11d3eab649c1c

மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை யில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பாதிப்பிற்கு உள்ளாகும் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க நிவாரணம் தயாராக வைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். மழைநீர் வடிகால் விரைந்து சீரமைத்து சாலைகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஏரிகளில் மழை நீரை சேமிக்க செயல்திட்டம் வைத்து செயலாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top