மெட்ரோ ரயில் நிலையத்தில் குரங்குகள் அட்டகாசம்! நிர்வாகம் எடுத்த முடிவு; அச்சத்தில் குரங்குகள்!

இந்தியாவில் தரைவழி போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தரைவழிப் போக்குவரத்து செலவு குறைவாக காணப்படுவது ரயில் போக்குவரத்து ஆகும். இந்த நிலையில் இந்தியாவில் தற்போது பல மாநிலங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. மெட்ரோ ரயில் நேரத்தை மிச்சப்படுத்து கின்றன.மெட்ரோ

இந்நிலையில் இந்த மெட்ரோ ரயிலில் குரங்குகள் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி உத்தர பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்திலுள்ள பாட்சா நகர் ரயில் பகுதியில் அண்மைகாலமாக குரங்குகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை.

இதனால் அந்த பகுதியில் மக்கள் வர மிகவும் அச்சத்துடன் காணப்படுகின்றனர். இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய வழிமுறையை கடைப்பிடித்தது. அந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் பெரிய அளவிலான குரங்கு பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதோடு மட்டுமில்லாமல் குரங்கு சத்தத்துடன் எழுப்பும் ஒலிபெருக்கியும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான குரங்குகள் ரயில் நிலையத்திற்குள் நுழைவது தவிர்க்கப்படுகிறது. இந்த குரங்கு பொம்மை மற்றும் இந்த சத்ததால் குரங்குகள் அச்சத்தோடு காணப்படுவதோடு மட்டுமில்லாமல் ரயில் நிலையத்திற்குள் வருவதும் தவிர்க்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment