Connect with us

வேகமாக பரவும் குரங்கு அம்மை-அமெரிக்காவில் ஒருவருக்கு உறுதி..!!

செய்திகள்

வேகமாக பரவும் குரங்கு அம்மை-அமெரிக்காவில் ஒருவருக்கு உறுதி..!!

தற்போது உலகமெங்கும் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுகிறது. இந்த கொரோனா நோயானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அச்சத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதன் மத்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குரங்கு அம்மை பாதிப்பானது அதிகரித்தது. இவற்றின் விளைவாக மேலை நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இங்கிலாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின் நாடுகளை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குரங்கு அம்மை பாதித்த நபர் ஏப்ரலில் கனடாவிற்கு சென்றுவிட்டு மே மாத தொடக்கத்தில் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சின்னம்மை பயன்படுத்தப்படும் தடுப்பூசி குரங்கு அம்மை நோய்க்கும் பலனளிக்கும் என்று மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு நான்கு நாட்களுக்குள் சின்ன அம்மை தடுப்பூசி தடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top