Connect with us

இந்தியாவில் குரங்கு அம்மையா? – மத்திய அரசு தகவல்..

monky

News

இந்தியாவில் குரங்கு அம்மையா? – மத்திய அரசு தகவல்..

இந்தியாவில் இதுவரையில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்படவில்லை என இந்திய மருத்துவ கழக ஆராய்ச்சி மையம் தெரிவித்திள்ளது.

இந்நிலையில் நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தயாராக இருப்பதாக கூறியுள்ளது. குறிப்பாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயனிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு அதிக காய்ச்சல், தடிப்புகள், உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ கழக ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

குரங்கு காய்ச்சலால் யாராவது பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களோடு தொடர்பில் இருப்பதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த நோய் குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வைரஸ் இந்தியாவில் இதுவரையில் கண்டறியப்படவில்லை என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top