ஷாக் நியூஸ் !! பிரிட்டனில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..

கொரோனா என்னும் கொடிய வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில் தற்போது புதிய வகை அம்மை  கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் இருந்து பிரிட்டன் வந்த நபருக்கு குரங்கு அம்மை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குரங்கு அம்மை அரிய வகை வைரஸ் தொற்று என்றும் இது மனிதர்களின் எளிதில் பரவாது என பிரிட்டன் மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் சில வாரங்களில் குணமடையும். இருப்பினும் சில நேரங்களில் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மையால் பாதிக்கப்பட்டவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் நெருங்கிய நிலையில் இருந்தவர்களை பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குரங்கில் இருந்து மனிதருக்கு பரவும் அம்மை நோய் பிரிட்டனில் முதன்முதலில் 2018ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின்னர் ஒரு சிலருக்கு மட்டுமே பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே கேரளாவில் தக்காளி காய்ச்சல் பரவி வரும் நிலையில் தற்போது புதிய வகை அம்மை கண்டறியப்பட்டதால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment