Connect with us

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பா? – அமைச்சர் விளக்கம்!!

Tamil News large 3084104

தமிழகம்

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பா? – அமைச்சர் விளக்கம்!!

தென்னாப்பிரிக்காவில் நோய்வாய்ப்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் பரவிய குரங்கு அம்மை நோயானது பல்வேறு நாடுகளில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் பரவத்தொடங்கியது.

குறிப்பாக சில தினங்களுக்கு முன் கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு 3 பேருக்கு உறுதிசெய்யப்பட்ட நிலையில் டெல்லியில் ஒருவருக்கு என மொத்தம் 4 பேருக்கு இந்தியாவில் குரங்கு அம்மை  தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றைய தினத்தில் 4 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனையறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் தமிழகத்தில் இதுவரையில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு யாருக்கும் இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அதே போல் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top