டெல்லியில் பரவ தொடங்கிய குரங்கம்மை: பீதியில் பொதுமக்கள்!!!

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த குரங்கு அம்மை நோயானது கேரளாவில் பரவி வந்த நிலையில் தற்போது டெல்லியில் ஒருவருக்கு தொற்று உறுதியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. 31 வயதான அந்த இளைஞருக்கு காய்ச்சல் மற்றும் தோளில் புண்கள் ஏற்பட்டு இருப்பதால் அனுமதிக்கப்பட்டார். பிறகு அவரை பரிசோதனை மேற்கொண்டதில் குரங்கு அம்மை உறுதியானதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் உலகம் முழுவதும் சுமார் 72 நாடுகளில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 16 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் குரங்கு அம்மையை உலக சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே குரங்கு அம்மை தொடர்ந்து அதிகரித்து வருவதால் உலக மக்களில் சரியாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment