Connect with us

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை: பீதியில் பொதுமக்கள்!!

monky

செய்திகள்

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை: பீதியில் பொதுமக்கள்!!

ஐரோப்பாவில் தொடங்கிய குரங்கு அம்மை நோயானது அமெரிக்கா உள்ளிட்ட அடுத்தடுத்த சுமார் 60 நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் பரவிய குரங்கு அம்மையாம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.

ஆப்பிரிக்கா நாடுகளில் தொற்றுகள் ஏற்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் குரங்கு அம்மை பரவி வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டது.

குறிப்பாக வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதியானதால், தொற்று பரவல் மேலும், அதிகரிக்காமல் இருக்க அம்மாநிலத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் இதுவரையில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட 3 பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top