Connect with us

குரங்கு அம்மை: அனைத்து மாநிலங்களுக்கும் பறந்தது அதிரடி உத்தரவு!!

monky

செய்திகள்

குரங்கு அம்மை: அனைத்து மாநிலங்களுக்கும் பறந்தது அதிரடி உத்தரவு!!

ஆப்பிக்கா நாடுகளில் தொடங்கிய குரங்கு அம்மை நோயானது பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில் கேரளாவில் உள்ள ஒருவருக்கு அறிகுறி தென்பட்டது.

இதனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கும் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் குரங்கு அம்மை நோயில் 86% ஐரோப்பிய கண்டத்திலும், 11% பாதிப்பு அமெரிக்காவில் ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், குரங்கு அம்மைக்கான பரிசோதனை குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் குரங்கு அம்மை தொற்று தென்பட்டால் அவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் இவ்வாறு செய்யும் பட்சத்தில் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் தென்பட்டால் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான படுக்கை வசதி சிகிச்சைகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top