கட்டுக்கட்டாக சிக்கிய பணம்: ராணிப்பேட்டையில் பரபரப்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், ரயிலில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் 37 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா ஒழிப்பு குறித்து தமிழக அரசு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரயில் நிலையங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதோடு ஒன்றரை கிலோ தங்க நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது  ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தங்க வியாபாரம் செய்வதற்காக இதனை எடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் 37 லட்சம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் சுங்க வரி துறையினரிடம் ஒப்படைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.