பணக்கஷ்டம் ஏற்படாமல் இருக்க

உப்பு மஹாலட்சுமியின் அம்சமானது அதனால் உப்பை இரவில் யாருக்கும் கடன் கொடுக்க கூடாது என்பது நமது ஐதீகங்களில் ஒன்றாகும். மாலை 6 மணிக்கு மேல் தான் மஹாலட்சுமி வீட்டுக்குள் வருவதாக ஐதீகம் உள்ளது.

அந்த நேரத்தில் மஹாலட்சுமியின் அம்சமான உப்பை அடுத்தவர் கேட்கிறார் என்பதற்காக கடனாக கொடுக்க கூடாது.

உப்பை வீட்டில் மண்பானையில் போட்டு வைக்க வேண்டும்,அதை மண்பானையில் போட்டு வைப்பதால் மஹாலட்சுமி தரும் அனைத்து விசயங்களும் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.

உப்பை மண் பானையில் போட்டு வைத்த காரணத்தால் மண் பானைக்கு ‘ஸ்வர்ணம்’ என்ற பெயரும் உள்ளது. அதாவது தங்கத்தின் மகளான மகாலட்சுமியை தனக்குள் தாங்கும் மண் பானை வீட்டில் இருந்தால், அங்கே பணக்கஷ்டம் ஏற்படாது என்ற வி‌ஷயம் பல இடங்களில் நம்பிக்கையோடு கடைப்பிடிக்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.